Eb Office Complaint Number உங்க பகுதியில் கரண்ட் கட்டா?... எந்த நெம்பரில் புகாரளிப்பது?...படிங்க..

Eb Office Complaint Number நம் வீடு அல்லது ஆபீஸ் அல்லது எங்கு பவர் கட் ஆகி உள்ளதோ இதுகுறித்து தகவல் அளிக்க வேண்டிய செல்போன் எண் 94987 94987 ஆகும். மேலும் உள்ளே படிச்சு பாருங்க...;

Update: 2023-11-25 08:01 GMT

Eb Office Complaint Number

மனிதன் உயிர் வாழ தற்காலத்தில் மின்சாரம் என்பது தேவையானதாக உள்ளது. வீடு ,ஆபீஸ், தொழில்நிறுவனங்கள்,ஆலயங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் கரண்ட் சப்ளை என்பது மிக மிக அவசியமானதாக உள்ளது.

அக்காலத்தில் வாழ்ந்தோர் போதிய மின்வசதி இல்லாமலேயே தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டு விட்டனர். ஆனால் தற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் மலைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கூட மின்சாரம் புதியதாக கம்பங்கள் நட்டு கொண்டு செல்லப்பட்டு இருண்டு கிடந்த மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொண்டு வந்துள்ளது மின்சார வாரியம். இதனைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

முன்பெல்லாம் நம் வீடுகளில் கரண்ட் கட் ஆனால் மாதாந்திர பராமரிப்பு தவிர மற்ற நேரங்களில் உடனே நாம் மின்சார வாரிய ஆபீஸ் சென்று அங்குள்ள நோட்டில் எழுதி வைத்துவிட்டு வரவேண்டும் அனைத்து தகவல்களோடு. உங்கள் பகுதி ஒயர்மேன் அந்த நோட்டினைப் பார்த்துவிட்டு உங்கள் ஏரியாவுக்கு வந்து பிரச்னையைச் சரி செய்து கொடுப்பார்.

அதற்கு பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மின்பகிர்மான வட்ட அலுவலகங்களில் கணிணி அறை நிறுவப்பட்டு இந்த புகார்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதியப்பட்டு பின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டது. குறைகளை நிவர்த்தி செய்த பின் அந்த கம்ப்யூட்டர் அறையிலுள்ள பணியாளர் உங்களை போனில் தொடர்பு கொண்டு உங்களுடைய புகார் சரி செய்யப்பட்டு விட்டதா என கேட்பார். இது இரண்டாவது நடைமுறையாக இருந்தது.



ஆனால் சமீப காலத்தில் மாநிலத்தில் எங்கு மின்வாரிய புகார்கள் வந்தாலும் சென்னையிலுள்ள மின்னகத்தில் நாம் புகார் அளித்தால் அவர்கள் உரிய அலுவலகத்தினைத் தொடர்பு கொண்டு தகவல் அளி்த்துவிடுகிறார்கள். நாம் மின்னகத்தில் புகார் அளிக்க வேண்டிய செல்போன் நெம்பர் 94987 94987 ஆகும். இந்த எண்ணில் தொடர்புகொண்டு நம் வீ்ட்டில் அல்லது எங்கு என்ன பிரச்னை என்று நம்முடைய சர்வீஸ் கனெக்‌ஷன் நெம்பரோடு தகவல் தெரிவித்துவிட்டால் அவர்கள் உரிய நடவடிக்கையினை உடனடியாக எடுக்கின்றனர். இங்கு பதியப்பட்டவுடன் உள்ளூர் மின்வாரிய அலுவலகத்திலிருந்து உங்களைத் தொடர்பு கொள்வார்கள் பின் வந்து சரி செய்துவிடுவார்கள். இதுதான் இப்போதைய நடைமுறையாக உள்ளது. முன்பு போல் நமக்கு அலைச்சல் இல்லைங்கோ...இது மற்ற நடைமுறைகளைவிட வெகு சுலபமானதாகவும் இருக்குதுங்கோ... பயன்படுத்துங்கோ....

Tags:    

Similar News