வங்க கடலில் நிலநடுக்கம்: சென்னையில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
வங்ககடலில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.;
சென்னைக்கு கிழக்கே வங்கக்கடலில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக காக்கிநாடாவில் இருந்து 296 கி.மீட்டர் கிழக்கு திசையில் வங்ககடலில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் சென்னையில் பல பகுதியில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது .