ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: நிர்வாகிகள் விழிப்புடன் செயல்பட வேண்டுகோள்
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளில் நிர்வாகிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். அதிமுக மாவட்ட செயலாளர் வேண்டுகோள்.;
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்திற்க்கு உட்பட்ட நிர்வாகிகள் விழிப்புடன் செயல்பட்டு கட்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளதையொட்டி வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆர்.கே.நகர் தொகுதி கிழக்கு, வடக்கு, மேற்கு, பகுதிக்கான 17 வட்டத்திற்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தண்டையார்பேட்டையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையிலும், பகுதி செயலாளர்கள் ஆர்.நித்தியானந்தம், சீனிவாச பாலாஜி, ஆகியோரது முன்னிலையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் ஆர்.எஸ். ராஜேஷ், ஆலோசனை வழங்கி பேசிய போது கூறியதாவது,
கழக ஒருங்கிணைப்பாளர்களின் வழிகாட்டுதலின் படி வருகின்ற மாநகராட்சி தேர்தலை யொட்டி அந்தந்த வட்ட பகுதியில் மக்கள் நலப்பணிகளை முன்னிறுத்தி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சி பணிகளை மேற்க்கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் மேற்க்கொள்ள வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் 1-1-2022 தேதியை தகுதி நாளாகக் கொண்டு நேற்று வெளியிடப்பட்டதை யொட்டி 1-11-21 முதல் 30-11-21 வரை புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணிகளில் கால அவகாசம் வழங்கி உள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதிக்குயில் அந்தந்த வார்டுகளுக்குட்பட்ட கழக வட்ட நிர்வாகிகளுடன் பாக பொறுப்பாளர்கள், மற்றும் வாக்கு சாவடி முகவர்கள் ஒருங்கிணைந்து தங்களுக்கான பகுதிகளில் வீடு, வீடாக, சென்று 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள், மற்றும் புதிதாக குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் இறந்தவர்கள் பெயர்களை நீக்கவும் பெயர் திருத்தம், உள்ளிட்ட பணிகளில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், மேலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டத்திற்க்கு உட்பட்ட நிர்வாகிகள், தங்களை முழுமையாக கழகத்தில் ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக கட்சி பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதில் மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், வட்ட செயலாளர்கள், ஏ.வினாயகமூர்த்தி, பி.கே.யுவராஜ், வேல்முருகன், ராமமூர்த்தி, எம்.நாகூர் மீரான், இ.வேலுமேஸ்திரி, புருஷோத்தமன், சந்தனசிவா, ஆர்.வி.அருண்பிரசாத், எம். மாலா, மற்றும் ஜேசிபிஎஸ் சுரேஷ், சீனிவாசன், மற்றும் மாவட்ட பிற அணி அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.