ஆர்கே நகர் திமுகவினருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ
ஆர்கே நகரில் திமுக நிர்வாகிகளுக்கு எம்எல்ஏ எபினேசர் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து இனிப்புகள் மற்றும் பட்டாசு வழங்கினார்.;
சென்னை ஆர். கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜேஜே எபினேசர் ஏற்பாட்டில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தா. இளைய அருணா ஆர்கே சட்டமன்ற தொகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள், பகுதி செயலாளர், பொதுக்குழு உறுப்பினர்கள் வட்ட செயலாளர்கள், வட்ட நிர்வாகிகள், மகளிர் அணி, மீனவரணி, இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்து இனிப்புடன் கூடிய பட்டாசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.