வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 100 க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு
தேர்தலில் ஆர்.கே.நகர்மற்றும் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 14 வார்டுகளில் போட்டியிட இரண்டாவது நாளான இன்றும் மனு அளித்தனர்;
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாநகராட்சி மாமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர், மற்றும் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 14 வார்டுகளில் போட்டியிட, இரண்டாவது நாளான இன்றும் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் 100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விண்ணங்களை பெற்று பூர்த்தி செய்து, தங்களது விருப்ப மனுக்களை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷிடம் வழங்கினர். இதில் பகுதி செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், மாவட்ட பிற அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.