ஆர்.கே.நகரில் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பேருக்கு எம்எல்ஏ எபினேசர் உணவு வழங்கல்

ஆர்கே.நகரில் மழையால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பேருக்கு எம்எல்ஏ எபினேசர் உணவு வழங்கினார்.;

Update: 2021-11-08 09:45 GMT

ஆர்.கே.நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க தயாரிக்கப்பட்ட உணவை பார்வையிடும் எம்எல்ஏ எபினேசர்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் ஆர்.கே நகர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே. எபினேசர் நேரில் சென்று பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான உணவு தங்கும் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை  செய்து தந்தார்.

 முதல் கட்டமாக மழைநீர் சூழ்ந்துள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள இடங்களில் மக்களுக்கு 25-க்கும் மேற்பட்ட வாகனங்களில் உணவுகள் சமைத்து தொகுதி முழுவதும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று  10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. 

இதற்கான ஏற்பாடுகளை ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் நேரடியாக களத்தில் நின்று செய்து வருகிறார்.உடன் ஆர்.கே.நகர் மேற்கு பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News