சென்னை மழை பாதிப்பு: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு
வடசென்னை மழைபாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு செய்தார்.
தொடர் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வடசென்னை, ஆர்.கே.நகர், மற்றும் பெரம்பூர் தொகுதியில், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, இன்று ஆய்வு செய்தார்.
மழையால் பாதிக்கப்பட்ட 41 வது வட்டம் எழில் நகர், எம்.ஜி.ஆர். நகர், மற்றும் பெரம்பூர் பகுதி 37 வது வட்டம் முல்லை நகர் குடிசை பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி கம்பளி, பெட்சீட், 5 கிலோ அரிசி, கோதுமை, சர்க்கரை, பிரட், பிஸ்கெட் பாக்கெட், உள்ளிட்ட மளிகை பொருட்களை, நலத்திட்ட உதவிகளாக வழங்கினார். அப்போது வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.
ஆய்வு கூட்டத்தில், அதிமுக சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் எம்.ஏ.சேவியர், மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், ஆர்.கே.நகர் பகுதி அதிமுக செயலாளர்கள் ஆர்.நித்தியானந்தம், சீனிவாச பாலாஜி, பெரம்பூர் பகுதி செயலாளர்கள் வியாசை எம். இளங்கோவன், என்எம். பாஸ்கரன் மற்றும் மாவட்ட பிற அணி நிர்வாகிகள், மகளிரணியினர் இருந்தனர்.