சென்னை காசி மேட்டில் சுனாமி நினைவு நாள் அனுசரிப்பு

சென்னை காசி மேட்டில் 17 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

Update: 2021-12-26 14:00 GMT

சென்னை காசி மேட்டில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இந்திய மீனவர்கள் நல முன்னனி சங்கம் சார்பில் சுனாமி பேரலை தாக்கி 17 ஆண்டுகள் ஆன நிலையில் அதனை நினைவு கூறும் வகையில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

காசிமேடு மீன்பிடி துறைமுக நுழைவு பகுதியில் இருந்து அனைவரும் கருப்பு உடை அணிந்து பேரணியாக கடல் வலை சென்று மலர் தூவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இந்திய மீனவர் நல முன்னனி சங்கம் சார்பில் 1000 பேருக்கு உணவு, அரசி போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் இந்திய மீனவர் நல முன்னனி சங்கத்தின் தேசிய தலைவர் மா.கி.சங்கர், தேசிய பொது செயலாளர் என்.தியாகராஜன், தேசிய பொருளாளர்என்.ரங்கநாதன், தேசிய துணை தலைவர் ஆர்.ராஜன், இளைஞரணி செயலாளர்எஸ்.அருள்செல்வம், மகளிரணி தலைவி எஸ்.மச்சகாந்தி, மகளிரணி துணை செயலாளர் ஜி.கண்ணகி, தொழிற்சங்க தலைவர் ஆர்.பாஸ்கரன் ஆகியோர் உட்பட மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News