தண்டையார்பேட்டையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தண்டையார்பேட்டையில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை மாவட்ட தலைநகரங்களில் 9 ந்தேதி காலை 10.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் கூட்டாக அறிவித்தனர்.
இந்நிலையில் தண்டையார்பேட்டையில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், மாநில சிறுபான்மையினர் பிரிவு இணைச் செயலாளர் எம்.ஏ.சேவியர், மாவட்ட துணை செயலாளர் டி.ஒய்.கே.செந்தில், மாவட்ட இணை செயலாளர் ஜி.கிருஷ்ணவேணி, ஆர்.கே.நகர் பகுதி கழக செயலாளர்கள் சீனிவாச பாலாஜி, ஆர்.நித்தியானந்தம், பெரம்பூர் பகுதி கழக செயலாளர்கள் வியாசை எம்.இளங்கோவன், என்.எம்.பாஸ்கரன், ஆகியோரது முன்னிலை வகித்தனர்.
ஆலோசனை கூட்டத்தில் ஆர்.எஸ். ராஜேஷ், பேசியதாவது:
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது உத்தரவை ஏற்று தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்கள் நலன் காக்கும் பல்வேறு பணிகளை செய்யத் தவறி வரும் திமுக அரசைக் கண்டித்தும்,
மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் துயரங்களுக்குத் தீர்வுகாண வலியுறுத்தியும், வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அண்ணா தி.மு.க.வின் சார்பில் நாளை காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அத்தகைய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆர்.கே. நகர், மற்றும் பெரம்பூர் பகுதியை சேர்ந்த நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.