ரயில் முன் தள்ளி மகள் கொலை: அதிர்ச்சியில் தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு

Today Murder News -சென்னையில் மகளை ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டதால் தந்தை மாரைடைப்பால் உயிரிழந்தார்.

Update: 2022-10-14 03:44 GMT

கொலை செய்யப்பட்ட சந்தியா மற்றும் கொலையாளி சதீஷ்.

Today Murder News -சென்னையில் மகளை ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டதால் தந்தை மாரைடைப்பால் உயிரிழந்தார்.

சென்னை, கிண்டியை அருகே உள்ள ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா(வயது 20). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வந்தார். சந்தியாவுக்கு அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் காதல் தொல்லை கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது. இவரும் சந்தியா பயின்று வந்த அதே கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று சந்தியாவை பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் பேசுவதற்காக சதீஷ் சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த சதீஷ் திடீரென சந்தியாவை அந்த வழியாக வந்த மின்சார ரயில் முன் தள்ளியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சந்தியா, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மக்கள் நடமாட்டம் உள்ள பரங்கிமலை ரயில்நிலையத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து அங்கிருந்து சதீஷ் தப்பி ஓடினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் சந்தியாவின் உறவினர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதன்படி, ரயில்வே காவல் துறையினர் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், சென்னை, துரைபாக்கத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து இன்று அதிகாலை தப்பியோடிய சதீஷை போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து சதீஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், பெரும் சோகத்தில் இருந்த மாணவியின் தந்தை மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மகள் உயிரிழந்த வேதனையில் அவரது தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சந்தியாவின் தாய், தமிழ்நாடு காவல் துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருவதும், மாணவியை ரயில்முன் தள்ளிவிட்டு கொலை செய்த சதிஷ் என்பவர் ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் என்பதும் தெரிய வந்துள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News