சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு நாள் வரும் 13.09.2021 (திங்கள் கிழமை) காலை 11.00 மணியளவில் முதன்மை அஞ்சல் அதிகாரி, சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. சென்னை பொது அஞ்சல் அலவலகத்தினால் மட்டும் அளிக்கப்படும் அஞ்சலக சேவைகள் குறித்து ஆலோசனைகள் / குறைகள் ஏதேனும் இருப்பின் வாடிக்கையாளர்கள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அதன் விவரங்களை சென்னை பொது அஞ்சல் அலுவலம், சென்னை 600 001 என்ற முகவரிக்கு 11.09.2021 தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்கலாம்.
இந்தத் தகவல், சென்னை 600 001 சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தின் முதன்மை அஞ்சல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.