இந்தியாவில் கொரோனா தாெற்று தற்போதைய நிலவரம்

இந்தியா முழுவதும் கொரோனா தாெற்று பாதிப்பின் தற்போதைய நிலவரம்.

Update: 2021-10-07 06:12 GMT

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 92.63 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 22,431 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் காேவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவிதத்துக்கும் கீழ் உள்ளது. தற்போது 0.72 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மார்ச் மாதம் முதல், இது மிகக் குறைந்த அளவு.

நாட்டில் காேவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,44,198; கடந்த 204 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை. குணமடைந்தோர் விகிதம் தற்போது 97.95 சதவீதம்; கடந்த 2020 மார்ச் முதல் இது அதிகமான அளவு.

கடந்த 24 மணி நேரத்தில் 24,602 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,32,00,258

வாராந்திர பாதிப்பு விகிதம் (1.68 சதவீதம்) கடந்த 104 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் (1.57 சதவீதம்) கடந்த 38 நாட்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. இதுவரை மொத்தம் 57.86 கோடி காேவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

Tags:    

Similar News