2 துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக்: பல கோடி சரக்கு தேங்கும் அபாயம்..!

சென்னை, காட்டுப்பள்ளி ஆகிய 2 துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் ஒப்பந்ததாரர்கள் வாடகை உயர்வு கேட்டு ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் பல கோடி ரூபாய் சரக்கு தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-07-04 07:55 GMT

காட்டுப்பள்ளி துறைமுகத்தில் வாடகை உயர்வு கேட்டு கண்டெய்னர் லாரி  ஒப்பந்ததாரர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் சரக்குகள் தேங்கும் அபாயம் நிலவுகிறது.

வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் சரக்குகள் வந்தடைகிறது. இவ்வாறு கொண்டு வரப்படும் சரக்குகள் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் இதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் இயங்குகின்றன.

கடந்த 2014 ம் ஆண்டு முதல் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாடகை உயர்த்தப்படவில்லை. இதனை கண்டித்து இந்நிலையில் சென்னை துறைமுகம் மற்றும் காட்டு பள்ளி துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த 2014 -ல் இருந்து டீசல் 62 ரூபாய் அதிகரித்து 110 ரூபாய் ஆகியுள்ளது. இதுவரை மேலும் 80 சதவீதம் வாடகை உயர்வு வழங்க வேண்டும் என துறைமுக கண்டெய்னர் லாரி ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாய் சரக்குகள் தேக்கமடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News