மின் தடை தொடர்பாக புகார் அளிக்க தொடர்பு எண்கள்-மக்கள் கோரிக்கை
EB Phone Number-மின் தடை தொடர்பாக புகார் அளிக்க தொடர்பு எண்களை விளம்பரப்படுத்துமாறு மின்வாரியத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
EB Phone Number-மின்னகம் மைய எண்ணுடன், தற்போது செயல்பாட்டில் உள்ள வேறு புகார் எண்களையும், பிரிவு அலுவலகங்களில் விளம்பரப்படுத்துமாறு, மின்வாரியத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மின் தடை தொடர்பாக புகார் அளிக்க, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், மின் வாரியம் சார்பில், கணினி மின் தடை நீக்கும் மையங்கள் செயல்பட்டன. அவற்றில், '1912' என்ற தொலைபேசி எண்ணில், 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம். இது தவிர, ஒவ்வொரு பகுதியிலும் கணினி மின் தடை நீக்க பிரிவு செயல்பட்டது. அவற்றுக்கு தனித்தனி தொலைபேசி எண்கள் இருந்தன.
மேலும், 94458 50811 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்; மின் துறை அமைச்சர் வீட்டில், 044 - 2495 9525 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தரலாம். இந்நிலையில் சென்னை, மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள, 'மின்னகம்' என்ற புதிய நுகர்வோர் சேவை மையத்தை, முதல்வர் ஜூன் மாதம் துவக்கி வைத்தார்.
அந்த மையத்தில், மாநிலம் முழுதும் வசிக்கும் மக்கள், 94987 94987 என்ற எண்ணில், மின் தடை மட்டுமின்றி, கூடுதல் மின் கட்டணம் வசூல், மின் இணைப்பு தாமதம் என, மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களையும் தெரிவிக்கலாம்.இந்த புதிய எண் பலருக்கு தெரிய வில்லை. தற்போது, கணினி மின் தடை நீக்க பிரிவுகளும் செயல்படவில்லை. பொது மக்கள், மின் தடை தொடர்பாக, தங்களிடம் ஏற்கனவே உள்ள எண்களில் புகார் அளிக்கும்போது நடவடிக்கை எடுப்பதில்லை என புகார்கள் எழுகின்றன.
எனவே, மின்னக சேவை மைய எண்ணுடன், தற்போது செயல்பாட்டில் உள்ள வேறு எண்களை, அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், பிரிவு அலுவலகங்களில் விளம்பரப்படுத்துமாறு, மின் வாரியத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2