தொகுதி வேலையை பார்க்க விடுங்கப்பா இங்கேயுமா சினிமா-உதயநிதி ஸ்டாலின்
தொகுதி வேலை பார்க்க வந்திருக்கிறேன். பீஸ்ட் படம் தொடர்பான விவரங்களை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுவார்கள்-உதயநிதி ஸ்டாலின்;
விஜய் நடிச்ச பீஸ்ட் படத்துக்கு சில தரப்பிலிருந்து நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூலைக் குவித்து வருவதாக கூறப்படுது.
இப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படம் பேமிலி ஆடியன்ஸை கவர்ந்திருப்பதாக சில தியேட்டர் உரிமையாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பீஸ்ட் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வழக்கம் போல் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் கைப்பற்றி வெளியிட்டது. அவரிடம் பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினாய்ங்க.
அதற்கு பதிலளித்த உதயநிதி, நான் தொகுதி வேலை பார்க்க வந்திருக்கிறேன். பீஸ்ட் படம் தொடர்பான விவரங்களை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுவார்கள் அப்படீன்னு சொல்லி முகத்தை திருப்பிகிட்டு போயிட்டார்