முதலமைச்சர் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடி : லைகா நிறுவனம் வழங்கல்

தமிழக முதலமைச்சர் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு லைகா நிறுவனம் ரூ 2 கோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது.;

Update: 2021-06-19 07:03 GMT
தமிழக முதல்வரிடம் லைகா நிறுவனம் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ 2 கோடி வழங்கியது

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி தமிழகத்தில் பலரும் கொரோனா நிவாரண நிதி முதலமைச்சரிடம் வழங்கி வருகின்றனர். நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைத்துறையினர் நிதி வழங்கி வருகின்றனர். அதேபோல பல தொழில் அதிபர்களும் முதலமைச்சரிடம்  கொரோனா நிவாரண நிதியாக வழங்கி வருகின்றனர். 

அதன்படி சினிமா பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தினர்  தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு பொது நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடியை முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினர்.

Tags:    

Similar News