அரசு சுகாதார மையங்களில் wifi வசதி: சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் 17,077 சுகாதார நிலையங்களில் Wifi வசதி ரூ.46 கோடி செலவில் அமைக்கப்படுமென சட்டப்பேரவையில் அறிவிப்பு;
தமிழ்நாடு :17,077 சுகாதார நிலையங்களில் Wifi வசதி ரூ.46 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்தார்.10 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.2 கோடியில் செவிலியர்கள் குடியிருப்புகள் கட்டப்படும் எனவும், கீழ்பாக்கம் மருத்துவமனையில் உயர் சிறப்பு சிகிச்சை வழங்க உலக வங்கி திட்டத்தில் ரூ.125 கோடியில் கருவிகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.