தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு: மதுக்கடைகளுக்கு அனுமதி..?

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாகவும், மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2021-06-10 09:51 GMT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர், நிபுணர் குழு, முதன்மை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ஊரடங்கு நல்ல பலனை தருவதால், மேலும் ஒருவாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக் குழுவினர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், கடந்த முறை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து, எஞ்சிய பாதிப்பு குறைவான மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளையும் அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News