கொரோனா சிகிச்சை பெற புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது தமிழக அரசு!
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதற்கான புதிய வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், கொரோனா பாதித்தவரின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94க்கும் அதிகமாக இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது. வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94 முதல் 90க்குள் இருந்தால் கொரோனா சிகிச்சை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கலாம்.
கொரோனா நோயாளிகளின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90க்கும் கீழே குறைந்தால் மட்டும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளில் அனுமதிக்கலாம்
இவ்வாறாக 3 வகைகளாக நோயாளிகளை பிரித்து சிகிச்சை முறையை தொடர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டள்ளது.