தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதற்கான வழிகாட்டு நெமுறையை அரசு வெளியிட்டுள்ளது.
இதுபற்றி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94க்கு கீழ் இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கக்கூடாது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆக்சிஜன் அளவு 90 முதல் 94க்குள் இருப்பவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா மையங்களில் சிகிச்சை பெறலாம்.
தனிமைப்படுத்திக்கொள்பவர்களும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளும் குப்புற கவிழ்ந்நது படுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
3 வகையகளாக கொரோனா நோயாளிகளை பிரித்து சிகிச்சையை அளிக்க மருத்துவத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.