அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!

அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Update: 2021-05-25 06:28 GMT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொரோனாவின் 2ம் அலையின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரு வாரத்துக்கு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை.

இதனால் நேற்று முதல் 31ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்தார். அதன்படி காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்கி வந்த மளிகை கடைகள், காய்கறி, பழக்கடைகளும் மூடப்பட்டன.

இதனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நடமாடும் காய்கறி, பழ விற்பனை வாகனங்களை தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்துள்ளது.

இந்தநிலையில் தமிழக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்துறை செயலாளர் கோபால் உள்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News