தமிழக சட்டசபை கூட்டம் 21ம் தேதி தொடங்குகிறது: அவைத் தலைவர் அறிவிப்பு!

தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 21ம் தேதி ஆளுனர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்குகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.;

Update: 2021-06-09 14:34 GMT

தமிழக சபாநாயகர் அப்பாவு

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. எனவே முதல் சட்டசபை கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக இன்று ஆளுனர் பன்வாரிலால் புரோகித்தை , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில் சபாநாயகர் அப்பாடிப வெளியிட்ட அறிவிப்பில், தமிழக சட்டசபையின் 16வது கூட்டத்தொடர் வருகிற 21ம் தேதி ஆளுனர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்குகிறது.

ஆளுனர் உரைக்கு பிறகு சட்டமன்ற அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News