தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவம்னைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான தொகுப்பு வீதம், தற்போதுள்ள தொற்று காலத்தில் மக்கள் நலன் காத்திடவும், கட்டணமில்லா சிகிச்சை வழங்கிடும் வகையிலும் தீவிரமில்லாத கொரோனா சிகிச்சைக்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூ.15,000 வசூலிக்கலாம். அதிதீவிர சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வசூலிக்கலாம்.
ஆக்சிஜன் இல்லாத படுக்கை வசதியுடன் சிகிச்சை அளிக்க ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7,500 வரை வசூலிக்கலாம். செயற்கை சுவாசக் கருவியுடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.35 ஆயிரம் வசூலிக்கலாம். தீவிர சிகிச்சை பிரிவில் உடுருவாத செயற்கை சுவாசக் கருவி வசதியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.3,000 வசூலிக்கலாம்.
கொரோனா சிகிச்சைக்காக அதிகரிக்கப்பட்ட கட்டணத் தொகை இரண்டு மாதங்களுக்குள் தொற்றின் தன்மைக்தேகற்ப மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் குறித்து 1800 425 3993 அல்லது 104 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.