'போதிய தடுப்பூசி வழங்குங்கள்': மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

தமிழகத்துக்கு போதைய தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2021-06-02 11:08 GMT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு எழுதிய கடிதத்தில், தமிழக மக்கள் தொகைக்கு ஏற்பட தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை.

தமிழக அரசு ஒரு கோடி தடுப்பூசி டோஸ் கேட்டிருந்த நிலையில் 42 லட்சம் தடுப்பூசி டோஸ் மட்டுமே வழங்கப்ப்டடுள்ளது.

உடனடியாக 50 லட்சம் தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும். செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News