முழு ஊரடங்கு: மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தமிழக முதலமைச்சர் ஆலோசனை!
ஒருவார முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.;
தமிழகம் முழுவதும் இரு வாரங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது நாளையுடன் முடிவடைகிறது. ஆனால் கொரோனா தொற்றின் வேகம் குறையவில்லை. எனவே நாளை முதல் மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒருவாரத்துக்கு அனைத்து கடைகள், நிறுவனங்கள் இயங்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. பால் நிலையம், மருத்துவமனைகள், மருந்தகம், நாட்டு மருந்துகடைகள் உள்ளிட்டவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் தொகுப்பு தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஒருவார முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை நடத்துகிறார்.