முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா? இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.;
தமிழகத்தில் கொரோனா 2அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த 24ம் தேதி முதல் 31 ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை தமிழக முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தேவைப்பட்டால் தமிழகத்தில் முழு ஊரடங்கை நீட்டிப்பு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இன்று காலை 11 மணியளவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பொதுத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். எனவே இந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.