ஜெ..மரணம்தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 3 வார அவகாசம் கோரி கடிதம்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை செய்ய முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இவ்விசாரணை முடியாததால் மேலும் 3 வார கால அவகாசம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.;
மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி.
தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016 ம் ஆண்டு உடல்நலமில்லாமல் திடீரென இறந்தார். சுமார் 75 நாட்களாக அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகி்ச்சை மேற்கொண்டு வி்ட்டு திடீரென இறந்ததால் அவருடைய கட்சியைச் சார்ந்த அளைவருமே அதிர்ச்சியடைந்தனர்.
இவரது மரணம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சியான திமுக விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. அதன் படி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. பல முறை இந்த ஆணையம் கால நீட்டிப்பினை பெற்றுள்ளது. தற்போது இதன் கால கெடு முடிவடைவதாலும், இன்னும் விசாரணை முழுக்க முடியாததால் மேலும் 3 வார கால நீட்டிப்பு செய்ய அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.
ஜெ மரணம் தொடர்பாக மருத்துவகுழு அமைத்து விசாரணையை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்துக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. இதன்படி அந்த குழு இந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட பலரிடம் விசாரணை நடத்தியுள்து. இதன் இறுதி அறிக்யைானது இம்மாதத்தில் இந்த வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என கமிஷனிடம்சொல்லியிருந்த நிலையில் மேலும் 3வார கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.