8 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி!
தமிழகத்தில் 8 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், மதுரை மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம்.
அனுமதி அளிக்கப்பட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை இ-பாஸ் பெறப்பட்ட 4 சக்கர வாகனங்களில் மட்டுமே அழைத்து செல்ல வேண்டும்.
தங்களது பணியாளர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.