பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் : தமிழக முதல்வர் உத்தரவு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2021-05-19 15:01 GMT

பேரறிவாளன்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, புழல் சிறையில் இருந்து வரும் பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு அளித்திருந்த கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உரிய விதிகளைத் தளர்த்தி 30 நாட்கள் விடுப்பு வழங்க ஆணையிட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News