உணவு நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு.
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 978 வழக்குகள் பதிவு செய்து அபராதம் வசூலித்த சென்னை போக்குவரத்து காவல்துறை.;
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 978 வழக்குகள் பதிவு - சென்னை போக்குவரத்து காவல்துறை. சுவிக்கி - 450 பேர், சோமாட்டோ - 278 பேர் , டன்சோ - 188 பேர், மற்றவை - 62 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து ரூ.1.35 லட்சம் அபராதம் வசூல்.
போக்குவரத்து விதிகளை மீறியதாக ஸ்விகி, ஜொமேட்டோ, டன்ஸோ போன்ற உணவு விநியோக ஊழியர்கள் மற்றும் அமேசான், ஃபிளிப்கார்ட் ஆகிய ஈ.காமர்ஸ் நிறுவன ஊழியர்கள் என 978 பேர் மீது ஒரே நாளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உணவு டெலிவரி செய்யும் நபர்கள், ஈ.காமர்ஸ் டெலிவரி ஊழியர்கள் போன்றோர் போக்குவரத்து விதிகளை சரிவர பின்பற்றுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, ஜொமேட்டோ நிறுவனம் அறிவித்த 10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்னும் திட்டம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகமாகும் என்பது பலரின் விமர்சனமாகும்.
இந்நிலையில், சென்னையில் நேற்று போக்குவரத்து போலீசார் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி, நேற்று ஒரே நாளில் சாலை விதிமுறைகளை கடைபிடிக்காத ஜொமேட்டோ, ஸ்விகி, டன்ஸோ போன்ற உணவு விநியோக ஊழியர்கள் மற்றும் அமேசான், ஃபிளிப்கார்ட் ஆகிய ஈ.காமர்ஸ் நிறுவன ஊழியர்கள் என 978 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு ரூ.1,35,400- அபராதம் விதிக்கப்பட்டது. வேகமாக செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் செல்லுதல், சிக்னலை மதிக்காமல் கடந்து செல்லுதல் போன்ற காரணங்களுக்காக ஜொமேட்டோ, ஸ்விக்கி, டன்ஸோ, ரேபிட்டோ, அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஊழியர்களும் என e-commerce நிறுவன ஊழியர்கள் 978 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிக்னல் மதிக்காமல் கடந்து சென்றவர்கள் 581 , நிறுத்தற்கோடுகள் கடந்து வாகனங்கள் நிறுத்தியவர்கள் 131, ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் 115, தவறான பாதையில் சென்றவர்கள் 70, மொபைல் பேசியபடி வாகனம் ஓட்டியவர்கள் 20, வேகமாக சென்றவர்கள் 61 என மொத்தம் 978 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.