சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இன்று டிஸ்சார்ஜ்
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்புகிறார்.;
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கடந்த 14ம் தேதி மதியம் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனடியாக போலீஸ் அதிகாரிகள், போலீஸ் கமிஷனரின் சொந்த வாகனத்தில் அவரை அழைத்துக்கொண்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். அவர் விரைவில் தனது வழக்கமான பணியைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.