சேதமடைந்த சாலை சீரமைப்பு பணிகள் ஒரு வாரத்தில் முடிக்க சென்னை மெட்ரோ உறுதி

மெட்ரோ பணிகளால் சேதமடைந்த சாலை சீரமைப்புகளை ஒரு வாரத்தில் முடிக்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Update: 2024-01-26 07:09 GMT

பைல் படம்

மெட்ரோ பணிகளால் சேதமடைந்த சாலை சீரமைப்புகளை ஒரு வாரத்தில் முடிக்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம் 2-ல் ஆர்.கே.சாலை, திருமயிலை மற்றும் மந்தவெளி ஆகிய இடங்களில் சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இடங்களில் போக்குவரத்து மாற்றத்திற்கான அனுமதி கிடைத்து, 07.01.2024 முதல் போக்குவரத்து மாற்றப்பட்டது.

கைவிடப்பட்ட வாகனங்கள், மாற்றுப்பாதைகள் மற்றும் பிற உள் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், போக்குவரத்து காவலரை நியமித்தல் மற்றும் சாலை சேதங்களை சரிசெய்வது குறித்து சாலை பயனர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்த இடங்களில் கைவிடப்பட்ட வாகனங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான பிரச்சனைக்கு தீர்வு காண, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து காவல்துறைக்கு உதவுவதற்காக, அனைத்து சந்திப்புகள் மற்றும் மாற்றுப்பாதைகளில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கூடுதல் போக்குவரத்து கண்காணிப்பு பணியாளர்களை (Traffic Marshalls) நியமிக்கவுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஒரு வழி போக்குவரத்தை முறையாக அமல்படுத்த அதிக போக்குவரத்து காவலர்களை பணியமர்த்துவதற்காக போக்குவரத்து காவல்துறையுடன் ஒருங்கிணைத்து வருகிறது. பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் மினி பேருந்துகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பெருநகர போக்குவரத்து கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் சேதமடைந்த சாலை சீரமைப்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு, சாலைகள் நல்ல நிலையில் உறுதி செய்யப்படும். மேலும், சாலை சீரமைப்பு பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News