Chennai Crime News சென்னையில் கஞ்சா விற்பதில் பிரச்னை ரவுடி கோஷ்டி மோதல் :ஒருவர் படுகொலை

Chennai Crime News சென்னையில் நடந்த இரு க்ரைம் செய்திகளில் ரவுடி கோஷ்டி தகராறில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். எஸ்ஐயைத் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-12-20 15:11 GMT

தாக்குதலில் காயமடைந்து ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்த பிரேம்குமார். 

Chennai Crime News

அல்லிக்குளம் நீதிமன்ற வளாகம் அருகே கஞ்சா வியாபாரம் முன் பகை காரணமாக ரவுடிகளின் நடக்கும் இரு கோஷ்டி முதலில் நேற்று ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்

சென்னை பெரிய மேடு பகுதியான அல்லி குளம் நீதிமன்றம் வளாகம் அருகே ரிப்பன் பில்டிங் பிரதான சாலையில் பட்டப் பகலில் நேற்று மாலை ஒயின் ஷாப் கடையில் மர்ம நபர்களால் 3 பேரை சரமாரியாக பட்டாகத்தியால் தாக்குதல் நடத்தி மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதில் ரத்த காயம் அடைந்த ஒருவரான பிரேம்குமார் என்பவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதே வழியிலேயே உயிரிழந்தார் .மேலும் இருவரான வசந்தகுமார் மற்றும் குரு ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை அறையில் சிகிச்சை பெற்று வருகின்றன. பெரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் ஆய்வுகள் மேற் கொண்டன

மேலும் தப்பி ஓடிய மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் நியமித்தனர்.பின்னர் தலைமறைவான நபர்களைப் பிடிக்க செல்போன் டவர்களை ஆய்வுகள் மேற்கொண்ட போது திருவண்ணாமலை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்தது.போலீசார் விரைந்து சென்று 6 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.பின்னர் சென்னைக்கு அழைத்து வந்து ரகசிய அறையான இடத்தில் 6 பேர் கொண்ட கும்பலை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

முதற்கட்ட விசாரணையில்1) மனோஜ் என்கிற கும்கி மனோஜ் (2)ரோகித் (3)துரைமுருகன் (4)சந்தோஷ் (5)செல்வா (6)அஜய்  ஆகிய 6 பேர் கொண்ட கும்பலை விசாரித்ததில் சென்னையில் இருக்கும் ஆங்காங்கே இடங்களில் கஞ்சா வியாபாரத்தில், சரித்திர பதிவு குற்றவாளியான பிரேம்குமார் சகோதரனான சஞ்சய் என்பவர் கஞ்சா வியாபாரம் கூடி சென்றதால் எதிர் தரப்பு (சேட்டு) என்கிற மற்றொரு கஞ்சா வியாபாரின் வியாபாரம் தோல்வியாக சந்தித்து வருவதாகவும் ஆதலால் 2013 ம் ஆண்டு கஞ்சா வியாபாரியான சஞ்சயை தீட்டு கட்ட திட்டம் தீட்டியதாகவும் அதற்கு சஞ்சியை ஓட ஓட வெட்டியதாகவும் பின்னர் சஞ்சய் இன் சகோதரரான பிரேம்குமார் என்பவர் பொறுமையாக காத்திருந்து 2021 ஆண்டு கஞ்சா வியாபாரி ஆன (சேட்டை) தீர்த்து கட்டியதாக தெரிவித்தனர்.

சேட்டின் கொலைக்கு பழி வாங்கும் நோக்கத்தில் கஞ்சா வியாபாரியான (சேட்டின்) கூட்டாளிகளான பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் நேற்று மாலை பட்டப் பகலில் ஒயின் ஷாப் சாலையில் இந்தக் கொலையை செய்ததாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளனர்

மேலும் தற்போது பிரபல கஞ்சா வியாபாரியான சேட்டின் கூட்டாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைக்க உள்ளனர் .கஞ்சா விற்பனையின் மோதலின் காரணமாக இந்த கொலை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்ஐ யைத்தாக்கியவர் கைது

உளவுப்பிரிவு உதவி ஆய்வாளரை தாக்கிய அபிராமபுரத்தை சேர்ந்த ஹர்ஷவர்தன் என்பவர் கைது மேலும் சிசிடிவி காட்சியை வைத்து போலீஸார் விசாரணை

உளவு பிரிவு உதவி ஆய்வாளரான கந்தசாமி நேற்று இரவு மூப்பனார் மேம்பாலத்தை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த போது, அவ்வழியாக அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இரு நபர்கள் பெண்மணியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்தனர்.

அப்போது இதனை கண்ட கந்தசாமி கீழே விழுந்த நபர்கள் அதிகளவில் குடிபோதையில் இருந்ததால் வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு போக்குவரத்து போலீசாரிடம் டிடி கேஸ் போடுமாறு சொல்லிய போது,அந்த குடி போதை ஆசாமிகள், எதற்காக சாவியை எடுத்தாய் என கேட்டு மப்பிலிருந்த உதவி ஆய்வாளர் கந்தசாமியை கையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இது குறித்து உதவி ஆய்வாளர் கந்தசாமி அளித்த புகாரின் பேரில் போதை ஆசாமி அபிராமபுரத்தை சேர்ந்த ஹர்ஷவர்தனை(32) தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இவ்வழக்கில் தப்பி ஓடிய இசக்கி பிரான்சிஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.

Tags:    

Similar News