சென்னை குரோம்பேட்டையில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்

சென்னை குரோம்பேட்டை GST சாலையில் ஓடிய கார் திடிரென தீப்பற்றி எரிந்தது, உள்ளே பயணம் செய்த 5 பேர் உடனடியாக வெளியேறியதால் உயிர்தப்பினர்.;

Update: 2022-05-13 09:55 GMT

சென்னை குரோம்பேட்டை குரோம்பேட்டை GST சாலையில் வந்து கொண்டிருந்த கார் ஓன்று திடிரென தீப்பற்றி எரிந்தது. உள்ளே பயணம் செய்த 5 பேர் உடனடியாக வெளியேறியதால் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.

சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் பூபதி (35). இவர் தனது உறவினர்களுடன் செஞ்சியில் நடைபெறும் சுப நிகழ்ச்சிக்கு செல்ல தாம்பரம் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஜி.எஸ்.டி சாலையை கடக்கும் போது காரில் ஏற்பட்ட இயந்திர கோளாறால் புகை கிளம்பியது. இதனை கண்ட உடன் காரில் பயணித்த 5 பேரும் காரிலிருந்து உடனடியாக வெளியேறினார்கள். சிறிது நேரத்தில் காரில் தீப்பிடிக்க தொடங்கியது. பின்னர் தீ மளமளவென பரவி கார் முழுவதும் எரிந்தது. இதனையடுத்து தாம்பரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Tags:    

Similar News