ரோஸ் மில்க் குடிக்கிறீர்களா? உஷார்! சிறுவனின் உயிரை பறித்த விபரீதம்

சென்னையில், ரோஸ் மில்க் குடித்த சிறுவன் உயிரிழந்தது, சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2022-05-28 15:45 GMT

சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 11 வயதுள்ள இரண்டாவது மகன் வசந்தகுமார், அருகில் உள்ள கடையில் நேற்றிரவு ரோஸ்மில்க் வாங்கி குடித்துள்ளான்.

பின்னர், வீடு திரும்பிய வசந்தகுமார் திடீரென மயங்கி விழுந்தான். உடனடியாக பெற்றோர், வசந்த்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதிர்ச்சியடைந்த திவ்யா, இது குறித்து கண்ணகி நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், சிறுவன் வசந்த்குமாரின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் பிறகே, இதற்காக காரணம் தெரிய வரும்.

அண்மையில், 10 ரூபாய் குளிர்பானம் வாங்கி குடித்து, சிறுமி மற்றும் பெண் உயிரிழந்த நிலையில், தற்போது, ரோஸ்மில்க் வாங்கி குடித்த சிறுவன் இறந்தது, சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News