முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது
16வது சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதியேற்றார். அவரின் தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது.
ஒவ்வொறு ஆண்டு தொடக்கத்தில் கூடும் முதல் சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்குவது மரபு, அதன்படி இன்று திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு நடக்கும் இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் துவங்கியது.
கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு காலை 9.55 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகை தந்தார். அவரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகிய இருவரும் வரவேற்றனர்.
சட்டமன்ற கூட்டத் தொடருக்கு வந்த ஆளுநர் நேராக சபாநாயகர் இருக்கைக்கு சென்றார், அவையில் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வணக்கம் தெரிவித்து வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து 10 மணி அளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையை சட்டசபையில் துவக்கினார்.அவர் ஆங்கிலத்தில் உரையாற்றி வருகிறார். பின்னர் ஆளுநர் உரையை சபாநாயகர் தமிழில் ஆற்றுகிறார்.