சென்னையில் மேலும் ஒரு பாலியல் புகார்! பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ்!!
சென்னை செனாய் நகரில் உள்ள பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.;
சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தொடர்பாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது முதலில் பாலியல் புகார் எழுந்தது. அவர் ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்படி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி 11, 12ம் வகுப்பு வணிகவியல் ஆசிரியர் ஆனந்த் மீது பாலியல் புகார் எழுந்தது. பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த இரு விவகாரங்களும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் சென்னை செனாய் நகர் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். இதனையடுத்து அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.