புதிய கல்வி முறையை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவர் முருகானந்தம்
"சென்றிடு வீர்எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" -பாரதியின் தொலைநோக்கு சிந்தனைக்கு உதாரணம்.;
சென்றிடு வீர்எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!"
என்ற பாரதியின் தொலைநோக்கு சிந்தனைக்கு ஏற்ப புதிய கல்வித்திட்டத்தை கொணர்ந்திங்கு சேர்த்தவர் முருகானந்தம்.
இந்தியாவில் சேப்டி மேனேஜ்மெண்ட் என்ற கல்விக்காக ஒரு கல்லூரியை முதன் முதலில் ஆரம்பித்தவர் முருகானந்தம். சென்னை, புதுக்கோட்டை ஆகிய 2 இடங்களில் செயல்படும் "IIPHS College of Fire & Safety Management" இந்தியாவில் பாதுகாப்பு மேலாண்மை படிப்புகளை வழங்குவதில் முன்னோடியாக உள்ளது, இந்தியாவில் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் பரந்த அளவிலான படிப்புகளை வழங்கும் ஒரே கல்லூரி என்ற பெருமை இதற்கு உண்டு.
இன்று ஆச்சி மசாலா முதல் அமெரிக்கன் கம்பெனி வரை சர்வதேச அளவில் எல்லா முக்கிய நிறுவனங்களிலும் சேப்டி ஆபீசராக லட்சங்களில் சம்பளம் வாங்குகின்றனர் இவரது மாணவர்கள்.
இந்த நிலையை உருவாக்க அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல, 16 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த பாடத்திட்டம் பற்றியும், அதற்கான வேலை வாய்ப்பை அறிந்தும் அதை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் லண்டன் சென்றார் முருகானந்தம். அதுவரை ராணுவத்தில் பணியாற்றி வந்தவர் இதற்காக விருப்ப ஓய்வை பெற்றுக் கொண்டார்.
2005 ல் முருகானந்தம் இந்த கல்வியை படிக்க லண்டன் சென்ற போது, அதற்கான பாடத்திட்டம் சர்வதேச அளவில் லண்டனில் மட்டுமே இருப்பதை அறிந்தார், மேலும் அதற்கான வேலை வாய்ப்புகள் எல்லா நாடுகளிலும் இருப்பதை அறிந்தார்.
இதை எப்படியாவது தமிழ் நாட்டிலும் கொண்டுவர வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் நாக்பூரில் மட்டுமே தீ அணைப்பு சேவைக்கான கல்வி இருந்தது, இந்தியாவின் மைய பகுதியாக நாக்பூர் இருப்பதால் அங்கு அந்த பாட திட்டத்தை கல்வியாக வைத்திருந்தனர். வேறு எங்கும் இந்த கல்வி முறையை பற்றி கேள்விபட்டதில்லை.
இத்தகைய சூழ்நிலையில் "சேப்டி மேனஜ்மென்ட்" என்ற ஒரு சிந்தனையை இந்தியாவில் கொண்டு வருவது பெரிய சவாலாகத்தான் இருந்தது, ஆனாலும் தளராமல் 2009 ல் தமிழ் நாட்டில் அதற்கான கல்லூரியை ஆரம்பித்தார்.
அதற்கான பாடத்திட்டங்களை தொகுத்து, முழுமையான வடிவில் கொண்டு வர முருகானந்தம் பட்ட சிரமங்கள் ஏராளம், அதைவிட அதற்கு ஒப்புதல் வாங்க அவர் பட்டபாடு அதிகம்.
அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் ஆகிய மூன்று பல்கலைக் கழகமும் இவரது பாட திட்டத்திற்கு அங்கீகாரம் அளித்து கல்வியில் சேர்த்தது. அதன் மூலம் இப்போது தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகம் EHS கல்வி படிப்புகளை வழங்குகிறது.
EHS கல்வி எனப்படும் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்த பாடத்திட்டத்தை இந்தியாவில் முதலில் கொண்டு வந்த பெருமை இவரையே சாரும். அதற்காக அவர் மேற்கொண்ட பெரும் முயற்சிகள் இன்று ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்துள்ளது.
எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் சரி, தங்கள் பாதுகாப்புத் தரத்தை உறுதி செய்யவே அதன் நிர்வாகம் விரும்பும். குறிப்பாக பல மேலைநாடுகளில் "சேப்ட்டி பர்ஸ்ட், டூட்டி நெக்ஸ்ட்" என்ற கொள்கையை சரியாக கடைபிடிப்பார்கள். நம்ம ஊரில் கொரோனா காலத்தில் தான் "சேப்ட்டி பர்ஸ்ட், டூட்டி நெக்ஸ்ட்" என்பதை பலரும் அறிந்தனர்.
பொதுவாக இப்போது எல்லா நிறுவனங்களும் பாதுகாப்புத் தரத்தை பராமரிக்க விரும்புகின்றன, எனவே பாதுகாப்பு படிப்புகளுக்கான வேலைகள் உலக அளவில் அதிகம் உள்ளது.
மாணவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன், 2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கல்லூரி, அதன் கனவை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றது.
IIPHS இயக்குனர் டாக்டர் ஜி.முருகானந்தம் இது குறித்து கூறும் போது,
IIPHS காலேஜ் ஆஃப் ஃபயர் & சேஃப்டி மேனேஜ்மென்ட், தமிழ்நாடு அழகப்பா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஸ்ரீ கணேசன்ஜி மெமோரியல் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது.
பாதுகாப்பு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் கொண்டு வந்து பாதுகாப்பான சூழலை அணுகுவதற்கு அடுத்த தலைமுறையை தயார்படுத்துதல் மற்றும் சர்வதேச தரத்துடன் EHS கல்வியை வழங்குவதே எங்கள் நோக்கம்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களால் பாதுகாப்புத் துறையில், பன்னாட்டு நிறுவனங்களில் எங்கள் மாணவர்கள் அதிகம் பணியாற்றுகிறார்கள், எங்கள் மாணவர்கள் இல்லாத பன்னாட்டு நிறுவனமே இல்லை என்று சொல்லலாம், பல லட்சங்களில் இன்று சம்பளம் வாங்கும் மாணவர்கள் ஏராளம், இதுவரை சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றனர்.
எங்கள் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதே எங்கள் நோக்கம். இங்கு தேர்ச்சி பெறும் மாணவர், வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையையும், தனது தொழிலில் பிரகாசிக்கக்கூடிய திறமையையும் கொண்டிருப்பார்கள், நாங்கள் எங்கள் மாணவர்களுக்கு அந்த வகையில் கல்வியும் பயிற்சியும் அளிக்கிறோம்.
EHS கல்வி (சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு) எனப்படும் தீ மற்றும் பாதுகாப்பு பாடத்திட்டத்தின் புதிய கல்விப் பாடத்திட்டத்தின் மூலம் ஸ்மார்ட் லைஃப் செட்டில்மென்ட் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க அனைத்து மாணவர்களையும் நான் வரவேற்கிறேன்.
இந்தப் படிப்பை முடிப்பதன் மூலம் உங்கள் கனவுகள் சரியான பாதையில் நிறைவேறும் என்று நான் பெருமையுடன் கூறுகிறேன். ஏனெனில், இந்தப் பாதுகாப்புத் துறையானது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அனைத்துத் தொழில்துறைகளாலும் மிகவும் விரும்பப்படுகிறது.
இந்த EHS பாடநெறியானது ILO - Geneva இன் படி சர்வதேச பாடத்திட்டத்துடன் பல்கலைக்கழக வழக்கமான முறை வகுப்புகளின் கீழ் நடத்தப்பட்டு வருகிறது.
எனவே, என்ஜினீயரிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட், லேண்ட் சர்வே இன்ஜினியரிங், பெண்களுக்கான நர்சிங் மற்றும் ஃபயர் & சேஃப்டி படிப்புகள் போன்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கும் படிப்புகளைத் தேர்ந்தெடுத்து உங்களின் எதிர்காலத்தை புத்திசாலித்தனமாக அமைத்துக்கொள்ளுமாறு அனைத்து மாணவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
இது தவிர, மாணவர்கள் ஒவ்வொரு வேலைக்கும் அடிப்படைத் தகுதியான தாய்மொழியைப் போலவே ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வலுவான தொடர்புத் திறன் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகள் மற்றும் பயனுள்ள கல்வி மட்டுமே உங்கள் எதிர்கால முயற்சிகளாக இருக்கும். அவற்றில் தீ மற்றும் பாதுகாப்பு பாடநெறியானது மாணவர்களுக்கு பிரகாசமான மற்றும் விரைவான வேலையை வழங்கும் என்று தெரிவித்தார்.