சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி விசாரணை

சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தினர்.

Update: 2024-05-21 16:31 GMT

ரூ.2000 கோடி போதை பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் தமிழக முன்னாள் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக்கும் அவரது கூட்டாளிகளான முகேஷ் அசோக்குமார் சதானந்தம் ஆகியோர்  சிக்கினார்கள்.

அவர்களை டெல்லி என்சிபி படையினர் அடுத்தடுத்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி திகார் சிறையில் அடைத்துள்ளனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜாபர் சாதிக்கின் வங்கி கணக்குகளில் ஏராளமான சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக தெரியவந்து அதற்காக அவர் மீது மார்ச் 10ஆம் தேதி அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்துகிறது.

அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் பத்தாம் தேதி ஜாபர் சாதிக் வீடு மற்றும் அலுவலகம் சினிமா இயக்குனர் அமீர் வீடு அவரது தொடர்புடைய 33 இடங்களில் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்நிலையில் ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேற்று சம்மன் உத்தரவின் பெயரில் நேரில் வந்தார். அவரிடம் கமலாக்கத்துறை அதிகாரிகள் கிடுக்கி பிடி போட்டு விசாரணை நடத்தினர். அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அமீனா பதில் அளித்து விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கியதாக அமலாக்க துறையினர் தெரிவித்தனர் இருப்பினும் அமீனா மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்படலாம் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

Similar News