சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்ட பயணிகள் இல்லாத ரயில்
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பயணிகள் இல்லாத ரயில் தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்து பயணத்தை ஒப்பிடும் போது பாதுகாப்பானது, கட்டணம் குறைவு என்பதால் தற்போது பயணிகள் ரயில் பயணத்தை மிகவும் விரும்புகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் பெட்டியின் நான்கு சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது. பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. பேருந்து, காரில் செல்வதை விட ரயில் பயணம் தான் பாதுகாப்பானது என்று பயணிகள் நம்பும் நிலையில், அண்மைக்காலமாக ரயில்களில் ஏற்படும் விபத்துக்கள் பயணிகளை அச்சம் அடைய வைத்துள்ளது.
வந்தே பாரத் உள்ளிட்ட சொகுசு ரயில்களில் கவனம் செலுத்தும் ரயில்வே நிர்வாகம், ரயில்கள் மற்றும் தண்டவாள பராமரிப்பிலும் கவனம் செலுத்தி இதுபோன்ற ரயில் விபத்துக்களை தடுக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த நிலையில், சென்னை பேசின் பிரிட்ஜ் யார்டு பகுதியில் விரைவு ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ரயில் பணிமனைக்கு செல்லும் போது தான் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. ரயில் பெட்டியின் நான்கு சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது.
இது குறித்த தகவல் கிடைத்ததும், விரைந்து வந்த ரயில்வே பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ரயில் தடம் புரண்டதால் மற்ற ரயில் சேவைக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்று ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் தரம் புரண்டது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.