அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தலைமை கழக அலுவலகத்திற்கு வருகை

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆலோசனைக்கூட்டத்தில் பொது செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்பு;

Update: 2022-04-19 04:17 GMT

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்

தலைமை கழகத்தில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, கரூர், நாமக்கல் மற்றும் பெரம்பலூர் ஆகிய வருவாய் மாவட்டங்களில் நடைபெற்ற கழக ஆய்வு கூட்ட விவரங்களை ஆய்வு குழுவினர் நேரில் அளிக்கவுள்ளனர்.

அந்த விவரங்களை பெற்று அந்த அந்த கழக மாவட்டங்களில் நடைபெற வேண்டிய கழக வளர்ச்சி பணிகள் பற்றிய ஆலோசனைகளை அந்த அந்த மாவட்ட செயலாளர்களுக்கு வழங்க உள்ளார்.

Tags:    

Similar News