சென்னையை 2வது நாளாக குளிர்வித்த கோடை மழை! மக்கள் நிம்மதி பெருமூச்சு
சென்னையில் வெயில் வாட்டி வரும் நிலையில் இன்று 2வது நாளாக மழை பெய்து வெயிலை விரட்டியடித்தது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.;
சென்னையில் நேற்று மாலை மழை பெய்தது. இதனால் அக்னி வெயிலின் தாக்கம் குறைந்தது. அதேபோல் இன்றும் மாலையில் மழை பெய்தது. சென்னை அண்ணாநகர், அம்பத்தூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், பூவிருந்தவல்லி, திருவான்மியூர், ஓம்.ஆர்., ஈ.சி.ஆர். எழும்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
இதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.