சென்னையில் பீகார் தம்பதியின் ஆண் குழந்தை கடத்தல் - நாக்பூரில் மீட்பு
பீகார் தம்பதியின் 3வது ஆண் குழந்தையை கடத்திய மத்தியப் பிரதேச இளைஞர்களை, அம்பத்துார் போலீசார் 4 மணி நேரத்தில் நாக்பூர் மடக்கி பிடித்தனர்.;
பீகாரை சேர்ந்த மிதிலேஷ்- மீரா தேவி தம்பதி, சென்னை அம்பத்துார் தொழிற்பேட்டையில் தங்கி இருந்தனர். இவர்களது 3வயது மகனை, கடந்த சனிக்கிழமையில் இருந்து காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அந்த தம்பதியினர், அம்பத்துார் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் தங்களை விசாரனையை தொடங்கினர்.
இதில், மிதிலேஷ் தங்கியிருந்த வீட்டில் மேல் தளத்தில் வாடகைக்கு இருந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷவ்குமார், மோனு, தாஸ் ஆகியோர் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து நாக்பூர் சென்ற அவர்களை, ரயில் நிலைய போலீசார் உதவியுடன் அவர்களை கைது செய்து, குழந்தையை பத்திரமாக மீட்டனர். போலீசாரின் துாித நடவடிக்கையில் புகார் அளிக்கப்பட்ட 4 மணி நேரத்தில் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.