வாக்களிப்பது தலையாய கடமை: இளைஞர்களுக்கு வழிகாட்டும் தம்பதியினர்
அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதனை தெரிவிக்கும் வகையில் 83 வயது முதியவர் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்;
ஜனநாயக கடமையை தவறாது நிறைவேற்ற குடும்பத்தினருடன் வந்த முதியவர்
முகப்பேரைச் சேர்ந்த சிவசங்கரன் (83) என்பவர் தனது மனைவி இந்திராணி (78) உடன் வந்து இன்று தனது வாக்கை பதிவு செய்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் சிவசங்கரன் தனது மனைவி, மகன், மருமகளோடு வந்து ஓட்டு போட்டுள்ளார். சுமார் 22 தேர்தல்களில் தனது வாக்கை பதிவு செய்துள்ள சிவசங்கரன், எந்த தேர்தலிலும் ஜனநாயக கடமையாற்ற தவறியதில்லை என்று பெருமையுடன் கூறினார்.
இளைஞர்கள் கண்டிப்பாக ஓட்டுப்போட வேண்டும். அப்போது தான் நாட்டிற்கு நல்லது. நமது ஜனநாயக உரிமையை காப்பது ஓட்டு தான். இதனை யாரும் தவிர்க்கக் கூடாது. நல்லதோ கெட்டதோ நாம் ஓட்டுப் போட வேண்டும் என்று சிவசங்கரன் கூறினார்.