கனமழை எதிரொலி: சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும்

சென்னை மற்றும் புறநகர், நெல்லை, தூத்துக்குடி. கள்ளக்குறிச்சி உள்பட 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-10-14 14:09 GMT

கோப்புப்படம் 

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை தொடங்கி உள்ளது. சென்னையில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். அக்டோபர் 15,16-ல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளுடன் அரசு தயார் நிலையில் இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 5 தினங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

கனமழை காரணமாக நாளை முதல் 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை, பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News