நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி : ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிர்சச்சியடைந்த ரசிகர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Update: 2021-10-28 16:30 GMT

மருத்துவமனையில் ரஜினி காந்த்

நடிகர் ரஜினிகாந்த் (வயது 70) இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சில தினங்களுக்கு முன்னர்தான் மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினைப் பெற்றார்.

இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிடம் விருது பெற்ற ரஜினி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவித், பிரதமர் மோடி ஆகியோரிடம் குடும்பத்துடன் நேரில் சென்று வாழ்த்துப் பெற்றார். தான் நடித்த அண்ணாத்தே படத்தைக் கூட நேற்று குடும்பத்துடன் பார்த்தார். இந்த நிலையில் தற்போது அவர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி பலரும் பிரார்த்தனை செய்கின்றனர்.

Tags:    

Similar News