சிறையில் வாடும் மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை பிணையில் விடுவிக்க அந்நாட்டு கோர்ட் ஒரு கோடியை செலுத்த உத்தரவிட்டுள்ளது;

Update: 2022-04-08 06:45 GMT

டிடிவி தினகரன்

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் அறிக்கையில் தெரிவித்துள்ளாரை்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை பிணையில் விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடியை செலுத்த உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சிய ளிக்கிறது.

தமிழக மீனவர்களுக்கு எதிராக தொடரும் இலங்கையின் இத்தகைய அடாவடிகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக மீனவர்கள் படும் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரடியாக தலையிட்டு, இலங்கை சிறையில் வாடும் இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-  என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Similar News