சொத்து மற்றும் கேளிக்கை வரி செலுத்தாத நிறுவனங்களை சீல் வைக்க மேயர் உத்தரவு?

சென்னை மாநகராட்சியில் சொத்து மற்றும் கேளிக்கை வரி செலுத்தாத நிறுவனங்களை மூடி சீல் வைக்க மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது

Update: 2022-04-04 04:58 GMT

சென்னை மேயராக பிரியாராஜன் பதிவியேற்றபோது

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், தனியார் கட்டிடங்களுக்கு ஆண்டுக்கு இருமுறை வரி வசூல் செய்யப்படுகிறது. நீண்ட காலமாக சொத்து மற்றும் கேளிக்கை வரி செலுத்தாத தனியார் கட்டிடங்கள், பெரு நிறுவனங்களிடம் பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

2021 - 2022-ஆம் நிதியாண்டில் மட்டும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி, தொழில் வரி, இதர வரி என மொத்தமாக 1,297 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சில தனியார் நிறுவனங்கள், விடுதிகள் சொத்து மற்றும் கேளிக்கை வரி செலுத்தாமல் உள்ளன தெரியவந்துள்ளது. நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாத நிறுவனங்களை ஜப்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் எதிரொலியாகவே கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு தியேட்டர் மூடி சீல் வைக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த தியேட்டர் உரிமையாளர்கள் பலர் சொத்து மற்றும் கேளிக்கை வரி பாக்கியாக ரூ.65 லட்சம் செலுத்தியுள்ளனர்.

இந்தநிலையில், சொத்து மற்றும் கேளிக்கை வரி நிலுவை வைத்துள்ள முக்கிய நட்சத்திர விடுதிகள் மீது கட்சி பாகுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் பிரியா ராஜன் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், சில முக்கிய நிறுவனங்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News