சென்னை மெட்ரோ இரயில் தொலைத்தொடர்பு பணிக்களுக்கான ரூ.99 கோடியில் ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ இரயில் தொலைத்தொடர்பு பணிக்களுக்கான ரூ.99 கோடியில் எல்&டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-07-07 08:10 GMT

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் தொலைத்தொடர்பு பணிக்களுக்கான ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு ரூ.99 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் தொலைத்தொடர்பு பணிக்களுக்கான ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு ரூ.99 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் அனைத்து வகையான தொலைத்தொடர்பு அமைத்தல் பணிகளுக்கான ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு ரூ.99 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் 27 மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் 1 பணிமனை ஆகியவற்றில் பயணிகளுக்கு ஒளிபரப்படும் தகவல் காட்சிகள், பொது முகவரி அமைப்பு, சிசிடிவி கண்காணிப்பு, அணுகல் கட்டுப்பாடு மற்றும் தொலைபேசி போன்ற தொலைத்தொடர்பு வசதிகள் அமைக்கும் பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் திரு. ராகவேந்திரன் முரளி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் துணை ஆலோசகர் ஏ.சங்கரமூர்த்தி (சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு), சி.முருகமூர்த்தி (குழு தலைவர் பொது ஆலோசகர்கள்), லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் திட்ட மேலாளர் எஸ்.ஜெயகுமார். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த நிகழ்வின் போது உடனிருந்தனர்.

Tags:    

Similar News