9,11 ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு

Update: 2021-02-06 05:54 GMT

வரும் 8-ம் தேதி முதல் 9,11 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டியது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காெரோனா தாெற்றால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது உயர் வகுப்புகளுக்கு மட்டும் திறக்கப்பட்டுள்ளது. இதில் பிப்ரவரி 8 ம் தேதி முதல் 9,11 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளிகள் செயல்பட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News